இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கும் புதிய படத்தில் அதிதி ராவ் நாயகியாக நடிக்கிறார்.
கமல் நடித்த ‘தூங்காவனம்’, விக்ரம் நடித்த ‘கடாரம் கொண்டான்’ ஆகிய படங்களை இயக்கியவர் ராஜேஷ். கடைசியாக ‘இரை’ என்ற இணையத் தொடரை இயக்கி உள்ளார்.
இந்நிலையில் தமிழ் , தெலுங்கு என இரு மொழிகளில் இவர் இயக்க உள்ள படத்தில் அதிதியை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர். நாயகியை முன்னிலைப்படுத்தும் படம் என்பதால் அதிதி கதையை கேட்ட உடனேயே நடிக்கச் சம்மதித்துள்ளார்.
தமிழில் முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்துள்ள போதிலும் அதிதிக்கு தமிழ்த் திரையுலகில் இன்னும் பெரிய வெற்றி அமையவில்லை. இந்நிலையில் ராஜேஷ் எம் செல்வா கூறிய கதையில் நடிப்பது தனது வளர்ச்சிக்கு உதவும் என அவர் நம்புகிறாராம்.
இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.


