துல்கருடன் இணைந்த ஐஸ்வர்யா லட்சுமி

துல்கருடன் இணைந்த ஐஸ்வர்யா லட்சுமி

1 mins read
fa344464-3c4f-4001-896f-068935fabad3
ஐஸ்வர்யா லட்சுமி. - படம்: ஊடகம்

துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்தது நல்ல அனுபவமாக அமைந்தது என்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி.

அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மானும் இவரும் நடித்துள்ள படம் ‘கிங் ஆப் கோதா’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, பின்னணிக் குரல் பதிவு உள்ளிட்ட தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தாம் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கான பின்னணிக் குரல் பதிவுப் பணியை முடித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா.

“இந்தப் படத்தில் ரித்திகா சிங், சரண், அனிகா சுரேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் குறுமுன்னோட்டத் தொகுப்புக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது,” என்கிறார் ஐஸ்வர்யா.

பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள இந்தப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்