அவதூறுப் பதிவால் கோபமான பூஜா

1 mins read
7bca993e-62ca-4ee6-8cf6-41769fef406e
பூஜா ஹெக்டே. - படம்: ஊடகம்

சமூக ஊடகங்களில் சிலர் பொறுப்பற்ற முறையில் செயல்படுவதாகச் சாடி உள்ளார் நடிகை பூஜா ஹெக்டே.

மும்பையைச் சேர்ந்த ஒருவர் இதுபோன்ற வதந்தியைப் பரப்பியதை அடுத்து, தனது வழக்கறிஞர் மூலம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக சமூக ஊடகப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘முகமூடி’, ‘பீஸ்ட்’ உள்ளிட்ட படத்தில் நடித்துள்ள பூஜாவுக்கு அண்மைக் காலங்களில் வெற்றி படங்கள் ஏதும் அமையவில்லை. சில பட வாய்ப்புகளும் கைநழுவிப் போயின.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக பூஜா தன் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்ததாகவும் குடும்பத்தினர் அவைரக் காப்பாற்றியதாகவும் மும்பையைச் சேர்ந்த ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், பலரும் பூஜாவின் நிலை குறித்து விசாரித்த வண்ணம் இருந்தனர்.

இதனால் ஆவேசமடைந்த பூஜா, தன்னைப் பற்றி அவதூறாகப் பதிவிட்டதாகக் குற்றஞ்சாட்டி வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

குறிப்புச் சொற்கள்