தமன்னா கவர்ச்சித் துள்ளலாட்டம்;ரசிகர்கள் தள்ளாட்டம்

தமன்னா கவர்ச்சித் துள்ளலாட்டம்;ரசிகர்கள் தள்ளாட்டம்

3 mins read
9a2fded0-7ae6-48f3-9bb4-8e3250326c3d
தமன்னா. - படம்: ஊடகம்

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிப் படங்களிலும் கடந்த பல ஆண்டுகளாகவே முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் தமன்னா.

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ‘காவாலா, காவாலா’ பாடலுக்கு கவர்ச்சித் துள்ளலாட்டம் போட்டுள்ளார்.

இந்தக் கிரங்கடிக்கும் ஆட்டத்தைக் காணும் தன் ரசிகர்கள் பலரையும் கடந்த மூன்று வாரங்களாக தள்ளாட வைத்துள்ளார் தமன்னா.

இந்நிலையில், வரும் ஆகஸ்ட் மாதத்தில் அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு மொழிப் பட வெளியீடுகள் என இரு சுவையான விருந்துகளைத் தரவுள்ளார் தமன்னா.

ஆகஸ்ட் 10ஆம் தேதி ரஜினிகாந்துடன் அவர் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படமும் ஆகஸ்ட் 11ஆம் தேதி சிரஞ்சீவியுடன் நடித்துள்ள ‘போலா சங்கர்’ தெலுங்குப் படமும் வெளியாக உள்ளன.

இருமொழிகளிலும் உச்ச நட்சத்திரங்களாக உள்ள ரஜினிகாந்த், சிரஞ்சீவி ஆகியோரது படங்களில் நடித்து இரண்டுமே அடுத்தடுத்த நாள்களில் வெளிவருவது என்பது தனக்கே சிறப்பு விருந்தாகத் தான் உள்ளது எனக் கூறியுள்ளார் தமன்னா.

இந்த மகிழ்ச்சியான சூழலில், அண்மையில் ஓடிடியில் வெளியான ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ இணையத் தொடரில் தமன்னா படுகவர்ச்சியாக நடித்திருந்தார்.

அதைப் பார்த்த ரசிகர்கள் முத்தக்காட்சிகள், படுக்கையறை காட்சிகளில் நடிக்கமாட்டேன் என்று கூறிவிட்டு எல்லை மீறி நடித்துள்ளீர்களே என கேள்வி எழுப்பி வந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அதற்குப் பதிலளித்துள்ள தமன்னா, “எனது சினிமா வளர்ச்சிக்கும் அடுத்தக்கட்ட நகர்வுக்கும் நான் முயற்சிகளை எடுத்து வருகிறேன்,” எனக் கூறியுள்ளார்.

‘ஜெயிலர்’ படத்தில் தெலுங்கு நடிகையாக தமன்னா நடித்துள்ளாராம். அதனால்தான் காவாலா பாடலில் தமிழ், தெலுங்கு சொற்கள் கலந்துள்ளது என்கிறார்கள். இதில் ரஜினிக்கு மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார் என்றும் தமன்னா ஜோடி இல்லை என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதனிடையே, ‘ஜெயிலர்’ படத்தின் மலையாள இயக்குநர் வட்டி கட்ட முடியவில்லை என கண்ணீர் வடித்துள்ளார்.

என் எதிர்காலமே ‘ஜெயிலர்’ படத்தை நம்பித்தான் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதே தேதியில், இதே பெயரில் இயக்குநர் ஷகிர் மாடத்தின் இயக்கத்தில் மலையாளத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ படமும் கேரளாவில் வெளியாகிறது.

இந்நிலையில் இயக்குநர் ஷகிர் நீதிமன்றத்தில் கேரளாவில் மட்டும் ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் தலைப்பை மாற்றக் கோரி வழக்குப் பதிவு செய்துள்ளார்.

நான் இந்தப் படத்தின் இயக்குநர் மட்டுமல்ல, படத்தையும் தயாரிக்கிறேன். இப்படத்தைத் தயாரிப்பதற்கு 5 கோடி ரூபாய் செலவானது.

எனது வீட்டையும் மகள்களின் நகைகளையும் அடைமானம் வைத்துதான் படம் எடுத்துள்ளேன். காரை விற்றுவிட்டேன். வங்கியிலும் வெளியிலும் கடன் வாங்கியுள்ளேன்.

வட்டி கட்டவே சிரமப்படுகிறேன். எனது எதிர்காலமே ‘ஜெயிலர்’ படத்தில்தான் அடங்கியுள்ளது.

இப்போதும் நான் கேட்பது மலையாளத்தில் மட்டும் தலைப்பை மாற்றுங்கள் என்றுதான். இவ்வாறு மலையாள ‘ஜெயிலர்’ பட இயக்குநர் ஷகிர் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

ரஜினி சொன்ன குட்டி கதை

கடந்த வெள்ளியன்று நடந்த ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நட்சத்திரங்கள் பலரும் தங்களது பட அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டனர்.

அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் மிகவும் சுவாரசியமாக ரசிகர்கள் மத்தியில் பேசினார். அப்போது, இவர் கூறிய குட்டிக் கதை ஒன்று, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

“பறவைகளில் காகம் எப்போதும் பலருக்கும் தொல்லை கொடுக்கும். ஆனால் பருந்து யாருக்கும் தொல்லை தராது. கழுகை கூட காகம் தொந்தரவு செய்யும், ஆனால் கழுகு எதுவுமே செய்யாது.

“மாறாக கழுகு அதைப்பற்றி கவலைப்படாமல் அடுத்த கட்டத்துக்குச் சென்றுவிடும். காகம் அதற்கு போட்டியாக ஒரு கட்டம் வரை பறக்கும்., ஆனால் அதனால் அதிக உயரம் பறக்கமுடியாது,” என்று கூறினார்.

இதில் தலைவர் காகம், கழுகு என யாரைச் சொல்கிறார் என்பது புரியாமல் பல ரசிகர்களும் குழப்பமடைந்தனர்.

குறிப்புச் சொற்கள்