முன்னாள் உலக அழகி சுஷ்மிதா சென் புதிய இணையத் தொடரில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
மும்பையில் வசிக்கும் சமூக ஆர்வலரும் திருநங்கை களுக்காகக் குரல் கொடுப்பவருமான ஸ்ரீகவுரி சாவந்த் என்ற திருநங்கையின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இணையத் தொடர் உருவாகிறது. தேசிய விருது பெற்ற இயக்குநர் ரவி ஜாதவ் இயக்கி உள்ளார்.
இந்த இணையத் தொடரின் குறுமுன்னோட்ட காட்சித் தொகுப்பு வெளியாகி உள்ளது.
தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அதைப் பகிர்ந்துள்ளார் சுஷ்மிதா.
சுஷ்மிதாவின் குரலுடன் தொடங்கும் முன்னோட்டத்தில் அவர் கண்ணாடியின் முன் தனது சேலையைச் சரிசெய்து கொண்டு, ஸ்ரீகவுரி சாவந்த் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் காட்சி இடம்பெற்றுள்ளது.
இந்த இணையத்தொடர் தனது திரைப்பயணத்தின் முக்கியமான படைப்பு என்றும் சவாலான இந்தக் கதாபாத்திரத்துக்கு ஏற்ப சிறப்பாக நடிக்க முடியும் என்றும் கூறுகிறார் சுஷ்மிதா.
இதையடுத்து திரையுலகத்தினரும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

