கமல்ஹாசன் மீண்டும் பெண் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சங்கர் இயக்கத்தில் அவர் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதில் ‘இந்தியன் தாத்தா’வாக அவர் நடிப்பது தெரிந்த சேதிதான்.
இந்நிலையில், கதைப்படி ஒரு பெண் கதாபாத்திரமும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தகவல். மிகவும் சவாலான பாத்திரம் என்பதால், தாமே அதில் நடிக்க விரும்புவதாக இயக்குநர் சங்கரிடம் கூறியுள்ளார் கமல். சங்கரும் இதற்கு ஒப்புக்கொண்டதை அடுத்து, கமலுக்கான ஒப்பனையை எவ்வாறு மேற்கொள்வது என ஆலோசனை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தகவல் கமல் ரசிகர்களை உற்சாகப்பட வைத்துள்ளது.
ஏற்கெனவே ‘அவ்வை சண்முகி’ படத்தில் வயதான பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கமல். பின்னர் ‘தசாவதாரம்’ படத்திலும் வயதான பாட்டியாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

