விஜய்யை முந்திய தனுஷ்

விஜய்யை முந்திய தனுஷ்

1 mins read
fa097b1a-b5b1-4f90-99fd-8ad53879b23f
‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ். - படம்: ஊடகம்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘கேப்டன் மில்லர்’ படம் டிசம்பர் 15ஆம் தேதி வெளியீடு காண உள்ளது.

இந்நிலையில், யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் குறுமுன்னோட்டக் காட்சித் தொகுப்பை 24 மணி நேரத்தில் 23.1 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இதன் மூலம் விஜய்யை முந்தியுள்ளார் தனுஷ்.

கடந்த ஜூலை 28ஆம் தேதி தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ‘கேப்டன் மில்லர்’ குறு முன்னோட்டம் வெளியானது.

இதற்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ படத்தின் குறுமுன்னோட்டம், அது வெளியான 24 மணி நேரத்தில் 20 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருந்தது.

அந்தச் சாதனையை தற்போது ‘கேப்டன் மில்லர்’ முறி யடித்துள்ளது. இந்கப் படம் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.

தனுஷுடன் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

குறிப்புச் சொற்கள்