தாமதமாகும் அனுஷ்கா பட வெளியீடு

தாமதமாகும் அனுஷ்கா பட வெளியீடு

1 mins read
6974534c-a33c-4558-b2b6-68457ebb0011
அனுஷ்கா. - படம்: ஊடகம்

அனுஷ்கா நடிப்பில் உருவாகி உள்ள ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படத்தின் வெளியீடு தள்ளிப்போயுள்ளது.

ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது இப்படம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனுஷ்கா நாயகியாக நடித்துள்ளார்.

ஆகஸ்ட் 4ஆம் தேதி இப் படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், தொழில்நுட்பப் பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால் பட வெளியீடு தள்ளிப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனால் அனுஷ்கா ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

ஆனால், அனுஷ்கா இதனால் வருத்தம் அடையவில்லை. நீண்ட நாள்களுக்குப் பிறகு தனது நடிப்பில் வெளிவரும் படத்தில் எந்தவிதமான குறைகளும் இருக்கக்கூடாது என்பதில் கவனமாக உள்ளாராம்.

அதனால் பட வெளியீடு தாமதமானாலும் தரமாக இருப்பது முக்கியம் என்று இயக்குநரிடம் அவர் கூறியுள்ளதாகத் தகவல்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்