ஆகஸ்ட் 4ல் மீண்டும் ‘சுப்ரமணியபுரம்’

ஆகஸ்ட் 4ல் மீண்டும் ‘சுப்ரமணியபுரம்’

1 mins read
e4d7a578-93fd-462c-9829-a1d69c4c27d0
ஜெய், சுவாதி, சசிகுமார். - படம்: ஊடகம்

கடந்த 2008ஆம் ஆண்டில் சசிகுமார் இயக்கத்தில் வெளியாகி, வரவேற்பை பெற்ற படம் சுப்ரமணியபுரம்.

இப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் கடந்த நிலையில், மீண்டும் தமிழகம் முழுவதும் வெளியீடு காண இருப்பதாக நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.

“வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று தமிழகத் திரையரங்குகளில் ‘சுப்ரமணியபுரம்’ மீண்டும் வெளியிடப்படும். அந்த அனுபவத்தை மீண்டும் ஒருமுறை பெறுங்கள்,’’ என இயக்குநர் சசிகுமார் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

ஜெய், சசிகுமார், சமுத்திரக்கனி, சுவாதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்த இப்படத்தில், ஜேம்ஸ் வசந்தனின் இசையில் ‘கண்கள் இரண்டால்’, ‘மதுர குலுங்க குலுங்க’ ஆகிய பாடல்கள் பெரும் பிரபலமாகின.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்