விக்ரம் பிரபு, விதார்த் நடிக்கும் ‘இறுகப்பற்று’ படத்தின் முதல் தோற்றச்சுவரொட்டி வெளியாகி உள்ளது. யுவராஜ் தயாளன் இயக்கும் இந்தப் படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நாயகியாக நடிக்கிறார்.
மேலும், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். பொடன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.
மாறுபட்ட கதைக் களத்துடன் உருவாகும் படைப்பு எனக் கூறப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இயக்குநர் மிக நேர்த்தியாக இப்படத்தை உருவாக்கி வருவதாகச் சொல்கிறார் விக்ரம் பிரபு.