சமந்தா: அடிவயிற்றில் இருந்து துக்கம் பொங்கி எழுந்தது

சமந்தா: அடிவயிற்றில் இருந்து துக்கம் பொங்கி எழுந்தது

1 mins read
d38d0c45-c9a1-46c4-954d-54c4db42d88e
சமந்தா. - படம்: ஊடகம்

பெண் குழந்தைகளை மிகவும் கவனமாகப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்கிறார் சமந்தா.

பாலியல் தொழிலில் விருப்பமின்றி ஈடுபடுத்தப்பட்டுள்ள பெண்கள் நடைப்பிணங்களைப் போல் வாழ்ந்து கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“எத்தனையோ அப்பாவி பெண் குழந்தைகள் விருப்பம் இல்லாமல் விபசாரக் கூடங்களில் நாள்தோறும் சித்திரவதைகளுக்கு ஆளாகிறார்கள்.

“இது தொடர்பான சில காட்சிகளை ஒரு திரைப்படத்தில் பார்த்தபோது மனதை உலுக்கிவிட்டன. அடிவயிற்றில் இருந்து துக்கம் பொங்கி எழுந்தது. அது என்னையும் அறியாமல் கண்களில் இருந்து கண்ணீராக வெளிப்பட்டது.

“அப்படிப்பட்ட நிலைமையை எதிர்கொள்ளும் பெண் குழந்தைகளின் வாழ்க்கை எவ்வளவு கொடூரமாக இருக்கும் என்பதும் புரிந்தது. நீண்ட நாள்களாக அந்தக் காட்சிகள் என் நினைவை விட்டு அகலாத காரணத்தால் தூக்கமின்றித் தவித்தேன்,” என சமந்தா தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்