தமன்னா: ‘சுறா’ போன்ற படத்தில் இனி நடிக்கமாட்டேன்

தமன்னா: ‘சுறா’ போன்ற படத்தில் இனி நடிக்கமாட்டேன்

1 mins read
0641f0b5-f3dc-4950-87f0-a216b9877279
‘சுறா’ படத்தில் விஜய், தமன்னா. - படம்: ஊடகம்

தாம் இதுவரை நடித்த படங்களிலேயே விஜய்யுடன் இணைந்து நடித்த ‘சுறா’தான் மிக மோசமான திரைப்படம் என்று கூறியுள்ளார் தமன்னா.

ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ள அவர், அண்மைய பேட்டி ஒன்றில், இனி அதுபோன்ற படங்களில் நடிக்கக்கூடாது என்பதில் தாம் கவனமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“உண்மையைச் சொல்ல வேண்டுமானால் ‘சுறா’ எனக்குப் பிடித்தமான படம்தான். ஆனால் அந்தப் படத்தில் நிறைய இடங்களில் நான் மோசமாகக் காட்சியளிப்பேன்.

“படப்பிடிப்பின்போதே அந்தப் படம் வெற்றிபெறாது என எனக்குத் தோன்றியது. சில படங்களில் நடிக்கும்போதே அது தோல்விப்படம் என்பது தெரிந்துவிடும்,” என்று தமன்னா தெரிவித்துள்ளார்.

வெற்றி, தோல்வி என்பதை எல்லாம் கடந்து, ஒரு படத்தில் நடிக்க சம்பளம் பெற்று ஒப்பந்தமாகிவிட்டோம் என்பதற்காகவே நடிக்க வேண்டியுள்ளது என்றும் அவ்வாறு செய்ய வேண்டியது கடமை என்றும் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் தமன்னா.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்