நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ நல்ல வரவேற்புடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்தப் படம் தொடர்பாக பேட்டி அளித்துள்ள சந்தானம், விக்னேஷ் சிவன்-நயன்தாரா குழந்தைகள் குறித்தும் உணர்வுபூர்வமாகப் பேசியிருப்பது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
‘வல்லவன்’ படத்தில் இருந்தே எனக்கு நயன்தாரா பழக்கம். என்னை அண்ணன் என்றுதான் கூப்பிடுவார். நானும் தங்கச்சி என்றே கூப்பிடுவேன்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிப்பதாக இருந்த படத்தில் எனக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம் இருந்தது. அது சம்பந்தமாக பேசுவதற்காக அவர்கள் வீட்டிற்குச் சென்றபோது தடபுடலாக விருந்து வைத்து அசத்தினர்.
இரண்டு குழந்தைகளிடமும் மாமா வந்து இருக்காங்க பாரு என்று கூறினர். நானும் என்னம்மா என் மடியில் வைத்துதானே குழந்தைகளுக்கு காது குத்துவாய் என்று கேட்டேன்.
திரைத்துறையில் இருந்து எனக்கு கிடைத்த தங்கைதான் அவர்.
குழந்தைகளுக்கு காது குத்துவதற்கு தாய்மாமன் சீர் எல்லாம் செய்யவேண்டும் என கலகலப்பாகப் பேசியுள்ளார் சந்தானம்.


