ஆங்கிலத்தில் பேசி நடிப்பது சிரமமாக உள்ளது

ஆங்கிலத்தில் பேசி நடிப்பது சிரமமாக உள்ளது

1 mins read
72d51934-1302-4a88-9dc7-d65e223a2565
ஆலியா பட். - படம்: ஊடகம்

‘ஹார்ட் ஆப் ஸ்டோன்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார் ஆலியா பட். படப்பிடிப்பின் போது ஆங்கிலத்தில் பேசுவது கடினமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஆங்கிலத்தில் பேசுவேன் என்றாலும், இந்தியில் தான் அதிகம் வசனம் பேசி நடித்துள்ளேன். ஆனால், இப்போது முழுவதுமாக ஆங்கிலத்தில் பேசி நடிப்பது சவாலாக இருக்கிறது.

“மற்றபடி எந்த வித்தியாசமும் தெரியவில்லை. எந்த மொழியாக இருந்தாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் மட்டுமே எனது கவனம் இருக்கும். “மற்றபடி எந்த வித்தியாசமும் தெரியவில்லை’,” என்கிறார் ஆலியா.

இவரைத் தமிழ் சினிமாவில் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்