இந்தி நடிகர் ரன்வீர் சிங்கின் நடிப்புக்கு தாம் தீவிர ரசிகை என்று கூறியுள்ளார் நடிகை பார்வதி.
ரன்வீர்சிங், ஆலியா பட் இணைந்து நடித்துள்ள ‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’ என்ற புதிய இந்திப் படம் அண்மையில் வெளியானது.
படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வெளிவந்துள்ள நிலையில், இந்தப் படத்தை திரையரங்கில் பார்த்த பின்னர், கதறி அழுததாக பார்வதி குறிப்பிட்டுள்ளார்.
“இடைவிடாமல் அழுததில் எனது மேல் சட்டை நனைந்துவிட்டது. ஒரு வாளி (பக்கெட்) நிரம்பும் அளவுக்கு கண்ணீர் சிந்தினேன். ரன்வீர் சிங் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரம் என்னை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. அவரது நடிப்பும் அருமை,” என்று பார்வதி மேலும் தெரிவித்துள்ளார்.
அவரது சமூக ஊடகப் பதிவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ரன்வீர் சிங்.

