முதல்வர் வேடத்தில் விஜய் சேதுபதி

1 mins read
7cb56a7b-cbfb-4e4e-b6c5-f00ec1fe903f
முதல்வர் சித்தராமையா, விஜய் சேதுபதி. - படம்: ஊடகம்

கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது. இதில் அவரது வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.

சவாலான கதாபாத்திரங்களைத் தேடிப்பிடித்து நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இந்நிலையில், ‘லீடர் ராமையா: எ கிங் ரைஸ்டு பை பீப்பிள்’ என்ற தலைப்பில் கர்நாடக முதல்வரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது.

’ராக்கெட்டரி’ படத்தில் விஞ்ஞானி நம்பி நாராயணன் இறுதிக்காட்சியில் தோன்றுவார். அதேபோல் தனது வாழ்க்கையைச் சித்திரிக்கும் படத்தின் இறுதிக்காட்சியில் தோன்ற முதல்வர் சித்தராமையா முன்வந்துள்ளாராம். மேலும், தனது கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க விஜய் சேதுபதி மிகப் பொருத்தமானவர் என்றும் முதல்வர் கருதுவதாகத் தகவல்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்