‘சந்திரமுகி 2’ திரைப்படத்தில் நடிகை கங்கனா ரனாவத்தின் தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் அப்படக்குழுவினர் சுவரொட்டி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு ‘சந்திரமுகி’ படம் வெளியானது. ரஜினி நடிப்பில் மிகப்பெரும் வெற்றியைப் பெற்ற அதன் இரண்டாம் பாகத்தையும் பி.வாசு தான் இயக்குகிறார்.
ராகவா லாரன்ஸ் நாயகனாகவும் கங்கனா ரனாவத் நாயகியாகவும் நடித்துள்ளனர். வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
அண்மையில் வேட்டையன் ராஜாவாக ராகவா லாரன்ஸ் தோற்றமளிக்கும் சுவரொட்டியை வெளியிட்டது படக்குழு, இப்போது ‘சந்திரமுகி’ கதாபாத்திரத்தில் கங்கனா தோற்றமளிக்கும் சுவரொட்டியை வெளியிட்டுள்ளது.

