விக்ரமுடன் மோதும் விஜய் சேதுபதி

விக்ரமுடன் மோதும் விஜய் சேதுபதி

1 mins read
00a26175-7b32-4e95-bbd9-d7179cda18e0
விஜய் சேதுபதி, விக்ரம். - படம்: ஊடகம்

விக்ரம் நடிக்கும் 62ஆவது படத்தை மலையாள இயக்குநர் ஜூயிட் ஆண்டனி ஜோசப் இயக்க உள்ளார்.

இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பார் என்று கூறப்படுகிறது. கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க வாய்ப்புள்ளதாம். லைக்கா நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

இதற்கிடையே, ‘தங்கலான்’ பட வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர் விக்ரம் ரசிகர்கள்.

இந்நிலையில், மீண்டும் பொன்ராம் இயக்கத்தில் நடிக்க உள்ளார் விஜய் சேதுபதி.

இருவரும் ஏற்கெனவே ‘டிஎஸ்பி’ என்ற படத்தில் இணைந்து பணியாற்றினர். எனினும் அந்தப் படம் பெரும் தோல்வியைச் சந்தித்தது. இம்முறை மாறுபட்ட கதையுடன் களமிறங்க உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்