எளிய மனிதர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் விதமாக உருவாகி உள்ளது ‘வேம்பு’.
அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கி உள்ள இப்படத்தில் ஹரிகிருஷ்ணன் நாயகனாகவும் ஷீலா ராஜ்குமார் நாயகியாகவும் நடித்துள்ளனர்.
“சில எளிய மனிதர்கள் சொந்த வாழ்க்கையைக் கடந்து இந்தச் சமூகத்துக்காக உழைக்கிறார்கள். வாழ்க்கைச் சூழல் அவர்களை எப்படி பெரிய மனிதர்களாக உருமாற்றுகிறது என்பதை இந்தப்படம் விவரிக்கும்.
“சமூகத்துக்கு உதவும் நல்ல கருத்துகளைச் சொல்கிறோம். ஒரு குடும்பத்தில் பெற்றோர் பிள்ளைகளை எப்படி வளர்த்து ஆளாக்குகிறார்கள், பெண்களை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கிறது, குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டும் சமூகத்தில் ஒரு தந்தை தன் மகளுக்கு எப்படி ஆதரவாக இருக்கிறார், அவள் எவ்வாறு சாதித்துக் காட்டுகிறாள் எனப் பல கேள்விகளுக்கு இந்தப் படத்தில் விடைகள் உள்ளன,” என்கிறார் இயக்குநர் ஜஸ்டின் பிரபு.
இந்தப் படத்தில் மாரிமுத்து, ஜெயராவ், ஜானகி அம்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆ.குமரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மணிகண்டன் முரளி இசையமைத்துள்ளார்.