விவாகரத்து வதந்தி; முற்றுப்புள்ளி வைத்த தீபிகா

விவாகரத்து வதந்தி; முற்றுப்புள்ளி வைத்த தீபிகா

1 mins read
26bd0e15-6656-4d6c-9f07-69ebc155e819
ரன்வீர் சிங், தீபிகா படுகோன். - படம்: ஊடகம்

கருத்து வேறுபாடுகள் அதிகரித்ததை அடுத்து நடிகை தீபிகா படுகோன் தனது கணவரும் நடிகருமான ரன்வீர் சிங்கை விவாகரத்து செய்ய உள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. எனினும் தீபிகா இதை மறுத்துள்ளார்.

திருமணத்துக்குப் பிறகும் தீபிகா படுகவர்ச்சியாக நடிப்பது ரன்வீருக்குப் பிடிக்கவில்லை என்றும் இருவரும் இப்போதே தனித்தனி வீடுகளில் வசிக்கின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், “உங்களை எல்லா விதத்திலும் சிரிக்க வைக்கக்கூடிய வாழ்க்கையை அழகாக்கக்கூடிய உங்கள் நண்பரையே காதலித்து திருமணம் செய்து கொள்ளுங்கள். அவ்வாறு செய்தால் நானும் ரன்வீர் சிங்கும் இருப்பதுபோல் உங்கள் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்,” என்றும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் தீபிகா.

இதன் மூலம் விவாகரத்து வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க தீபிகா, கணவர் ரன்வீர் சிங்கின் கையை உதறிவிட்டு தனியாக நடந்து சென்றார். இதையடுத்து இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாகத் கவல் பரவியது.

குறிப்புச் சொற்கள்