அஜித்தின் அடுத்த படத்தில் நடிகர் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இருவரும் ஏற்கெனவே ‘மங்காத்தா’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
‘துணிவு’ படத்தை அடுத்து மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடா முயற்சி’ என்ற படத்தில் நடிக்கிறார் அஜித். இதில் தமன்னாவும் திரிஷாவும் அவருக்கு ஜோடியாக நடிக்கின்றனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் அர்ஜுன் தாஸ் வில்லனாக ஒப்பந்தமாகி உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனும் எதிர்பார்ப்புடன் அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இதற்கிடையே, மூத்த நடிகர் அர்ஜுனும் இப்படக்குழுவுடன் இணைகிறார். அவர் அஜித்தின் நண்பராக நடிக்க உள்ளார் என்றும் மாறுபட்ட தோற்றத்தில் திரையில் தோன்றுவார் என்றும் கூறப்படுகிறது.