நாட்டுப்புறக் கலைகளையும் கலைஞர்களையும் கொண்டாட வேண்டும் என்று நடிகர் கார்த்தி வலியுறுத்தி உள்ளார்.
அக்கலைஞர்கள் தற்போது கொண்டாடப்படுவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனி இசை தொகுப்புக்காக நாட்டுப்புறப் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார் கார்த்தி. அண்மைக் காலமாக, திரைப்பாடல்களுக்கு இணையாக, தனி இசைத் தொகுப்புகளில் இடம்பெறும் பாடல்களும் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன.
அந்த வகையில் கார்த்தி பாடியுள்ள நாட்டுப்புறப் பாடலுக்கும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டுப்புறக் கலைகளையும் சொந்த மண்ணின் கலாசாரத்தையும் பிரதிபலிக்கும் விதமாக இப்பாடல் உருவாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.
“பல தலைமுறையைக் கடந்து வரும் நம் முன்னோர்களின் சொத்தான பாரம்பரியக் கலை வடிவத்தை இப்போதும் தொடர்ந்து பயிற்சி செய்து வரும் கலைஞர்களை பார்த்து தலை வணங்குகிறேன்.
“அவர்களுடைய மகத்தான பணி நீடிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்,” என்று தமது சமூக ஊடகப் பதிவில், கார்த்தி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

