வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை 2’ படத்தில் நடிக்க மஞ்சு வாரியருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பார் எனத் தெரிகிறது.
‘விடுதலை’ படத்தின் முதல் பாகத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் சூரி நாயகனாக நடித்துள்ளார். இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள வாத்தியார் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வாத்தியார் பாத்திரத்தின் மனைவியாக மஞ்சு வாரியாரை நடிக்க வைக்க வெற்றிமாறன் முடிவு செய்துள்ளதாகத் தகவல்.
ஏற்கெனவே தனுஷை வைத்து, தான் இயக்கிய ‘அசுரன்’ படத்தில் மஞ்சு வாரியரை நடிக்க வைத்திருந்தார் வெற்றிமாறன். இப்போது வாத்தியார் படத்திலும் அவருக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தை ஒதுக்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும்.

