41 வயதாகியும் இன்னமும் கவர்ச்சியாகவும் இளமையாகவும் இருந்து வருகிறார் புன்னகை அரசி சினேகா. இவர், உடற்பயிற்சிக் கூடத்தில் எடை தூக்கி பயிற்சியில் ஈடுபடும் காணொளி ஒன்றை இப்போது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதனைக் கண்ட அவரது ரசிகர்கள், “இந்த அளவுக்கு கடினமான உடற்பயிற்சிகள் தேவையில்லை. யோகா உள்ளிட்ட எளிய பயிற்சிகளைச் செய்தாலே போதும். இதுபோல் எடை தூக்கும் பயிற்சிகள் வேண்டாம். உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். உங்களுக்கு ஒன்று என்றால் எங்கள் மனது தாளாது,” எனப் பதிவிட்டு வருகின்றனர்.
40 வயதைக் கடந்துள்ள நடிகைகள் பலரும் தங்களது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள கடும் பயிற்சிகளைச் செய்துவரும் நிலையில், நடிகை சினேகாவும் கடும் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். தனது வீரதீர சாகசத்தைக் கண்டு ரசிகர்கள் அதிசயித்துப் போவார்கள் என்று எண்ணிய சினேகாவுக்கு ரசிகர்களின் அறிவுரைகளையும் எச்சரிக்கைகளையும் கேட்டு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
“நடிகை சமந்தாவும் இப்படித்தான் 100 கிலோ, 150 கிலோ எடையைத் தூக்குகிறேன் என இப்போது உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.
“புனித் ராஜ்குமார் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் மாரடைப்பு காரணமாக இறந்ததற்கு உடற்பயிற்சிக் கூடத்தில் அவர்கள் அதிக அளவில் எடையைத் தூக்கியதுதான் காரணம்,” என்று கூறி சினேகாவை மறுபடியும் உடற்பயிற்சிக் கூடம் பக்கம் போகவிடாமல் பயமுறுத்தி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

