‘சந்திரமுகி 2’ படத்தின் முதல் பாடலை வெளியிட்டுள்ளனர். ரசிகர்கள் மத்தியில் இப்பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பி.வாசு இயக்கத்தில் உருவாகி உள்ள ‘சந்திரமுகி 2’ படம் தொடர்பாக எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதில் ராகவா லாரன்ஸ் நாயகனாகவும் கங்கனா ரணாவத் நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
எதிர்வரும் பிள்ளையார் சதுர்த்தி அன்று இப்படம் திரைகாண உள்ளது.
அண்மையில் வெளியான லாரன்ஸ், கங்கனாவின் முதல் தோற்றச் சுவரொட்டிகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.
இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘ஸ்வாகதாஞ்சலி’ வெளியிடப்பட்டுள்ளது.

