அண்மையில் தனது 32வது பிறந்தநாளைக் கொண்டாடி உள்ளார் ஹன்சிகா. அது தொடர்பான புகைப்படங்களை அவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அவற்றில் மதுக் கிண்ணத்துடன் அவர் காட்சியளிப்பது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
“பிறந்தநாள் என்றாலே மதுவிருந்துடன்தான் கொண்டாட வேண்டுமா?” என்று பல ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் ஹன்சிகா வருத்தம் அடைந்துள்ளார்.
“இப்படி எதற்கெடுத்தாலும் விமர்சித்தால் என்ன செய்ய முடியும். ஒவ்வொருவருக்கும் சுதந்திரம் உள்ளது. பிறந்தநாளைக் கொண்டாடுவதில்கூட குறைகளைக் கண்டுபிடிப்பது சரியல்ல,” என்று ஹன்சிகா புலம்புகிறார்.
சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள புகைப்படங்களை நீக்குவது என அவர் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்.
கடந்த ஆண்டு தொழில் அதிபர் சோகைல் கட்டாரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார் ஹன்சிகா. திருமணத்துக்குப் பிறகும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.