விஷால், லட்சுமி மேனன் திருமணம்

விஷால், லட்சுமி மேனன் திருமணம்

1 mins read
97f02c69-7f08-4620-bb16-7cddf2ab71b7
விஷால், ,லட்சுமி மேனன். - படம்: ஊடகம்

நடிகர் விஷாலும், நடிகை லட்சுமி மேனனும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக வெளியான தகவல் தமிழ்த் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இது வெறும் வதந்தி என விஷால் தரப்பில் கூறப்படுகிறது.

விஷாலும் நடிகை வரலட்சுமியும் சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்ததாக ஊடகங்கள் தெரிவித்தன. நண்பர்களாக மட்டுமே பழகுகிறோம் என்று இருவரும் விளக்கம் அளித்த போதிலும், கிசுகிசுக்கள் ஓயவில்லை.

பிறகு கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாகக் கூறப்பட்ட நிலையில், வேறு ஒரு பெண்ணுடன் விஷாலுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில், 2014ஆம் ஆண்டில் வெளியான ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் நடித்தபோது விஷால், லட்சுமி மேனன் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கடந்த சில நாள்களாக ஒரு தகவல் வலம் வருகிறது. ஆனால் விஷால் தரப்பில் இது வெறும் வதந்தி என விளக்கம் அளிக்கப்படுகிறதாம்.

மேலும், நடிகர் சங்க கட்டடத்தைக் கட்டி முடித்த பிறகுதான் தனது திருமணம் நடைபெறும் என்று விஷால் அறிவித்திருப்பதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்