நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியீடு கண்ட முதல் நாளில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் கண்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.29.46 கோடியையும் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் ரூ.12.04 கோடியையும் வசூலாகப் பெற்றுள்ளதாம் இப்படம். கர்நாடகாவில் ரூ.11.92 கோடி, கேரளத்தில் ரூ.5.38 கோடி வசூல் கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வெளிநாடுகளில் மட்டும் ரூ.32.75 கோடி என ஒட்டுமொத்தமாக உலகளவில் ‘ஜெயிலர்’ படத்தின் முதல் நாள் வசூல் ரூ.95 கோடியைக் கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“தென்னிந்தியாவில் எந்த ஒரு தமிழ் படமும் இவ்வளவு பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றதில்லை. அனைத்து கணக்குகளையும் இறுதி செய்யும்போது முதல் நாள் வசூல் நிச்சயம் ரூ.100 கோடியை எட்டியிருக்கும்,” என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.

