தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரபுதேவா படத்தில் விஜய் சேதுபதி பாடிய பாடல்

1 mins read
874f6641-8f3b-47c0-9d72-84ddea099c8c
பிரபுதேவா, விஜய் சேதுபதி. - படம்: ஊடகம்

பிரபுதேவா நடிக்கும் ‘வுல்ஃப்’ படத்தில் ஒரு பாடலைப் பாடி உள்ளார் விஜய் சேதுபதி.

இது பிரபுதேவா நடிக்கும் 60வது படமாகும். முழுநீள திகில் படமாகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் இப்படத்தை வெளியிட உள்ளனர்.

பிரபுதேவாவுடன் ராய் லட்சுமி, ரமேஷ் திலக், அஞ்சு கோபிகா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இந்தப் படத்தில் விஜய் சேதிபதி பாடியுள்ள பாடல் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக படக்குழுவினர் ஒரு சுவரொட்டியை வெளியிட்டுள்ளனர்.

இத்தகவல் விஜய் சேதுபதி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. தனது படத்தில் பாடியுள்ள அவருக்கு பிரபுதேவா நன்றி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ‘ஜவான்’ இந்திப் படத்தில் விஜய் சேதுபதி இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்