நடிகர் சிவகார்த்திகேயன் அண்மைக் காலமாக உடற்பயிற்சிக் கூடத்தில்தான் பெரும்பாலான நேரத்தைச் செலவிடுகிறார்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கும் தனது 21வது படத்தில் ‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டுடன் தோன்ற உள்ளாராம்.
அந்தப் படத்தில் ராணுவ ‘மேஜர்’ கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் அதற்காகத்தான் கடுமையாக உடற்பயிற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, அவர் உடற்பயிற்சிக் கூடத்தில் இருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளன. அவற்றை ரசிகர்கள் ஆவலுடன் பகிர்ந்து வருகிறார்கள்.
இதற்கிடையே, இது உண்மையான படங்கள் அல்ல என்றும் கணினி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி படங்களில் சில மாற்றங்களைச் செய்துள்ளனர் என்றும் ஒரு தரப்பு கூறுகிறது.

