திரைப்படமாகும் ‘டப்பாங்குத்து’ கலை

திரைப்படமாகும் ‘டப்பாங்குத்து’ கலை

1 mins read
b2fcdc77-8e63-4cb0-bacc-42d137ae6e47
‘டப்பாஙகுத்து’ படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி. - படம்: ஊடகம்

தமிழகத்தில் ஒரு காலத்தில் ‘டப்பாங்குத்து’ கலை மிகவும் பிரபலமாக இருந்தது. இன்றைய இளையர்களுக்கு அக்கலை குறித்து அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இந்நிலையில், மருதம் நாட்டுப்புற பாடல் நிறுவனம் ‘டப்பாங்குத்து’ என்ற திரைப் படத்தைத் தயாரிக்கிறது. இதை ஆர்.முத்து வீரா இயக்குகிறார், சரவணன் இசையமைக்கும் இந்தப் படம் ‘டப்பாங்குத்து’ கலை குறித்து விரிவாக அலசுகிறது.

‘தெற்கத்தி பொண்ணு’ புகழ் சங்கரபாண்டி, தீப்தி, காதல் சுகுமார், துர்கா மற்றும் ஆண்ட்ரூஸ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

மதுரை, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கோவில் திருவிழாக்களில் கரகாட்டம் உள்ள நிகழ்ச்சிகளில் இடம்பெறும். இதை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டதுதான் ‘கரகாட்டக்காரன்’ திரைப்படம். அதேபோல் தெருக்கூத்து கலையை மையமாக ‘டப்பாங்குத்து’ படத்தை உருவாக்குகிறோம்.

“கோவில் திருவிழாக்களில் தெருக்கூத்தும் தவறாமல் இடம்பெறும். அதில் ராஜா ராணி ஆட்டம், பேயாட்டம், டப்பாங்குத்து, கொலை சிந்து என வித விதமாக ஆடிப்பாடி மக்களை மகிழ வைப்பார்கள் தெருக்கூத்துக் கலைஞர்கள்,” என்கிறார் இயக்குநர் ஆர்.முத்து வீரா.

டங்பாங்குத்து கலையின் பெருமையைப் பேசும் வகையில் இப்படத்தில் பதினைந்து பாடல்கள் இடம்பெற்றுள்ளனவாம்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்