அனைவரும் தங்களால் இயன்ற எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நட வேண்டும் என நடிகர் சந்தானம் கேட்டுக்கொண்டுள்ளார்.
‘பசுமை இந்தியா சவால்’ (கிரீன் இந்தியா சேலஞ்ச்) என்ற அமைப்பின் மரக்கன்று நடும் சவாலை ஏற்று சந்தானமும் மரக்கன்று நட்டுள்ளார். மேலும், இந்த அமைப்புக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறினார்.
சந்தானம் நடிப்பில் அண்மையில் வெளியீடு கண்ட ‘டிடி ரிட்டன்ஸ்’ படத்தை தெலுங்கில் ‘பூத்தால பங்ளா’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளனர். இப்படத்துக்கான விளம்பர நிகழ்ச்சியில் சந்தானத்துடன் கதாநாயகி சுரபி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சந்தானம், அறிமுக இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் தன்னிடம் கூறியதுபோல் மிகக் கச்சிதமாக படத்தை இயக்கியதாகப் பாராட்டினார். கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியீடு கண்ட ‘டிடி ரிட்டன்ஸ்’ வசூலில் அசத்தி வருகிறது.

