உலக சாதனை படைத்துள்ள தமிழ்ப் படம் ‘3.6.9’

உலக சாதனை படைத்துள்ள தமிழ்ப் படம் ‘3.6.9’

1 mins read
95d031d8-22d0-49eb-9567-9785f7f2802a
‘3.6.9.’ படத்தின் சுவரொட்டி. - படம்: ஊடகம்

இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் நடித்துள்ள படம் உலக சாதனை படைத்துள்ளது.

‘3.6.9’ என்ற வித்தியாசமான தலைப்பில் உருவாகி உள்ள இந்தப் படத்தை சிவ மாதவ் இயக்கி உள்ளார்.

இப்படத்துக்கான மொத்தப் படப்பிடிப்பையும் வெறும் 81 நிமிடங்களில் முடித்துவிட்டனர். மொத்தம் 24 கேமராக்களைக் கொண்டு காட்சிகளைப் படமாக்கி உள்ளனர்.

நடிகர் பிஜிஎஸ் வில்லனாகவும் பிளாக் பாண்டி, அங்கயர் கண்ணன், சுபிக்‌ஷா, நிகிதா, பப்லு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். வெளிநாடுகளைச் சேர்ந்த சிலரும் நடித்துள்ளனராம்.

கார்த்திக் ஹர்ஷா இசையமைத்துள்ள இப்படத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘வேர்ல்ட் ரெக்கார்ட் யூனியன்’ என்ற அமைப்பு இந்தப் படத்துக்கு உலக சாதனை விருதை வழங்கி உள்ளது.

“ஒரு திரைப்படத்துக்கான மொத்தப் படப்பிடிப்பையும் 81 நிமிடங்களில் முடிப்பது சாதாரணமான முயற்சி அல்ல. மிகக் கடினமான செயலைத் திட்டமிட்டு நடத்திக் காட்டி உள்ளனர்.

“இந்த முயற்சியில் நானும் பங்கேற்றேன் என்பதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்,” என்கிறார் பாக்யராஜ்.

ஆகஸ்ட் 25ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது ‘3.6.9’ திரைப்படம்.

புதுமையான முயற்சிக்கு ரசிகர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் இப்படம் தரமான படைப்பாக உருவாகி உள்ளது என்றும் படக்குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்