கண்பார்வையற்ற சிறுமிக்கு உதவும் தமன்

கண்பார்வையற்ற சிறுமிக்கு உதவும் தமன்

1 mins read
c0b8a176-6f19-4cb9-8b14-c3048c8d9e64
சிறுமி புரோகித ஸ்ரீ, தமன். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் புரோகித ஶ்ரீ எனும் கண்பார்வையற்ற சிறுமி கலந்துகொண்டு, அருமையாகப் பாடி ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

இச்சிறுமியின் நிலை குறித்து விவரமறிந்த தமன் மிகவும் உருகிப்போனார். நிகழ்ச்சியின்போதே கண்கலங்கிய அவர், அச்சிறுமிக்குப் பார்வை கிடைக்க, தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யப் போவதாக உறுதியளித்துள்ளார்.

இதே நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறுவன் ‘கலர்வெடி’ கோகுல், தனது அண்ணன் ‘சரவெடி’ சரவணன் எழுதிய கானா பாடலைப் பாடி கவர்ந்தார்.

இதையடுத்து எதிர்வரும் தீபாவளிக்குள், தனது இசையில் உருவாகும் ஒரு படத்தில் இருவருக்கும் வாய்ப்பளிப்பதாக உறுதியளித்தார் தமன்.

வாய்ப்பு பெற்றவர்களுக்கும் வாய்ப்பு அளித்தவர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிகின்றன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்