ஆகஸ்ட் 14ஆம் தேதி திங்கட்கிழமை மாலை ஆறு மணி அளவில் மெட்ராஸ் மூவி மேக்கர்ஸ் ஸ்டூடியோவில் ஜீ 6 மூவிஸ் வழங்கும் ‘ஆந்தை’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீடு வெகு சிறப்பாக நடந்தேறியது.
‘ஆந்தை’ திரைப்படத்தில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இணை இயக்கம், தயாரிப்பு மேற்பார்வை ஆகிய பணிகளைச் செய்த எழுத்தாளர் மில்லத் அகமது அனைவரையும் வரவேற்று படத்தில் இடம்பெற்ற பாடல்கள் பற்றிப் பேசினார்.
இப்படத்தின் கதாநாயகன் விகாஸ், கதாநாயகி யாழினி மற்றும் பயில்வான் ரங்கநாதன் தங்களின் பட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.
சிறப்பு விருந்தினர்கள் நடிகர் அபி சரவணன், விநியோகஸ்தர் ஜெனிஸ் சிறப்புரை வழங்க, நாகூர் ஹனிஃபா நவ்ஷாத் தனது தந்தையார் பாடிய “உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்” என்ற பாடலைப் பாடி வாழ்த்தினார்.
படத்தின் இயக்குநர் நவீன் மணிகண்டன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை ரூபா தொகுத்து வழங்க, மக்கள் தொடர்பாளர் சக்தி சரவணன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் படம் வெற்றிபெற வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

