‘லியோ’ படத்தில் மூத்த நடிகர் அர்ஜுன் முக்கியக் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.
இந்நிலையில் அவரது பிறந்தநாளையொட்டி சிறப்பு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர் அப்படக்குழுவினர்.
கதைப்படி அர்ஜுனின் கதாபாத்திரத்தின் பெயர் ஹரால்டு தாஸ்.
நாற்பது விநாடிகள் ஓடும் அந்தக் காணொளியில் ஆந்திர மாநில பதிவெண் கொண்ட காரில் இருந்து அர்ஜுன் இறங்கிச் செல்லும் காட்சி இடம்பெற்றுள்ளது.
மேலும், தனது அடியாள்கள் புடைசூழ ஒருவரது கையை வெட்டும் வன்முறைக் காட்சியும் உள்ளது.
காணொளி முடிவில் ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்தக் காணொளியை விஜய் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர். மேலும், அர்ஜுனுக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

