‘ஜவான்’ படத்தில் இடம்பெறுள்ள சில காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. இதனால் அப்படக்குழுவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், இப்படம் குறித்த எந்தத் தகவலும் வெளியே கசிந்துவிடக்கூடாது என இயக்குநர் அட்லீக்கு உத்தரவிட்டுள்ளாராம் ஷாருக்கான்.
இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். படக்காட்சிகள் கசிந்ததில் அவர் மிகுந்த வருத்தத்தில் உள்ளதாகத் தகவல்.
இதற்கிடையே, படக்குழுவில் உள்ள ஒவ்வொருவரின் சமூக ஊடகப் பக்கங்களையும் விசாரணைக் குழு ஆராய்ந்து வருகிறது. இதுபோக மும்பை காவல்துறையில் படத்தயாரிப்புத் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.