ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது ‘இந்தியன் 2’ படம்.
இந்நிலையில், இப்படத்தின் சுவரொட்டியை வெளியிட்டுள்ளனர்.
இதில் பட நாயகன் கமல்ஹாசன் இயல்பாகக் காணப்படுகிறார். சமூக ஊடகங்களில் இப்படத்தை ரசிகர்கள் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்திய சுதந்திர தினத்தையொட்டி இந்தச் சுவரொட்டியை வெளியிட்டுள்ளோம் என்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் ‘இந்தியன் 2’ படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
சில தடைகளைக் கடந்து இப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது. கமல்ஹாசனின் நடிப்பு ரசிகர்களை அசர வைக்கும் என்று கூறப்படுகிறது.

