லண்டனில் நடிப்புப் பயிற்சி பெறும் சிம்பு

லண்டனில் நடிப்புப் பயிற்சி பெறும் சிம்பு

1 mins read
df642b9c-1013-4019-a35d-c5d89057a3cd
சிம்பு. - படம்: ஊடகம்

கோடிக்கணக்கில் ஊதியம் பெறும் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிம்பு இப்போது நடிப்புப் பயிற்சி பெற்று வருகிறார் என்றால் வியப்பாக இருக்கும்.

லண்டனில் உள்ள திரைத்துறை சார்ந்த பயிற்சி மையத்தில்தான் சிம்பு தற்போது பயிற்சி பெறுகிறார்.

திரைத்துறையுடன் தொடர்புள்ள ஒப்பனை நுணுக்கங்களும் நடன முறைகளும் அங்கு கற்றுத் தரப்படுகின்றன. பயிற்சிக் காலம் மூன்று மாதங்களாம்.

பயிற்சி முடிந்து சென்னை திரும்பிய உடனேயே கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

இதற்கிடையே அண்மையில் லண்டன் சென்ற சிம்புவின் பெற்றோர் அவருடன் ஒரு வாரம் தங்கியிருந்து கவனித்துக் கொண்டனராம்.

அதற்குள் சிம்புவுக்கு லண்டனில் பெண் பார்த்துள்ளதாகவும் திருமணத்தை நிச்சயிக்கத்தான் பெற்றோர் அங்கு சென்றதாகவும் ஒரு தகவல் வெளியானது. அதை சிம்பு தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்நிலையில் சிம்புவுக்கு ஏற்ற வரனை அவரது பெற்றோர் தொடர்ந்து தேடி வருகின்றனராம். விரைவில் நல்ல சேதி வரக்கூடும் எனத் தகவல்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்