பொறுமையாக இருந்தால் பெரிய வாய்ப்பு தேடி வரும் என்ற நம்பிக்கை பொய்க்கவில்லை என்கிறார் நிதி.
‘பாகுபலி’ பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக இவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.இதன் மூலம் மீண்டும் தமக்கான வாய்ப்புகள் தேடி வரும் என்கிறாராம் நிதி.
இயக்குநர் மாருதி இயக்கத்தில் ‘ராஜா டீலக்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி, நிதி அகர்வால் இக்குழுவுடன் இணைந்துள்ளார்.
இத்தகவலை இயக்குநர் மாருதி சமூக ஊடகப் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.
தமிழில் சிம்பு, ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த நிதி அகர்வாலுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் சொல்லிக்கொள்ளும்படி ஏதும் அமையவில்லை.
இந்நிலையில் தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானது அவருக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.


