இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்கிறார்.
இதில், நித்யா மேனன் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கிறது. தற்போது ‘இறைவன்’, ‘சைரன்’ உள்ளிட்ட படங்களை முடித்துவிட்டு ‘சீனி’ என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி.
இந்த படத்தை முடித்ததும் அவர் கிருத்திகா உதயநிதி இயக்கும் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
‘வணக்கம் சென்னை’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான கிருத்திகா அதன் பிறகு ‘காளி’ என்ற படத்தை இயக்கினார். இதையடுத்து ‘பேப்பர் ராக்கெட்’ என்ற இணையத் தொடர் ஒன்றும் இவரது இயக்கத்தில் உருவானது.
இந்நிலையில், இவர் சொன்ன கதை பிடித்துப் போனதால் தயக்கமின்றி நடிக்கச் சம்மதித்துள்ளாராம் ஜெயம் ரவி.

