மூத்த நடிகர் ராதாரவி, தமிழ் சினிமாவில் கறுப்பு வெள்ளை காலத்தில் இருந்து கோலோச்சிய நடிகர், நடிகைகளின் புகைப்படங்களை எல்லாம் தன் வீட்டில் பொக்கிஷமாக வைத்து வணங்கி வருகிறார்.
அவர்களை வணங்கிவிட்டுத்தான் படப்பிடிப்புக்குச் செல்கிறார்.
“வேறெந்த நடிகர் வீட்டிலும் இப்படியான புகைப்படங்கள் இருக்காது. இந்தக் கலைஞர்களின் பெயர்களே சிலருக்குத் தெரியாது என்று சொல்வேன்.
“இதற்காக சிலர் என்னை விமர்சித்தாலும் கவலையில்லை,” என்கிறார் ராதாரவி.
இடையில் சில சர்ச்சைகளில் சிக்கியபோதிலும் திரையுலகில் தீவிரமாக இயங்கி வரும் இவர், அரசியல் களத்திலும் சுறுசுறுப்பாக வலம் வருகிறார். இந்நிலையில் தமிழில் மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறாராம்.


