பொறுப்பில் இருந்து விலக்கப்பட்ட பார்வதி: ரசிகர்கள் கோபம்

பொறுப்பில் இருந்து விலக்கப்பட்ட பார்வதி: ரசிகர்கள் கோபம்

1 mins read
eb5b12ae-76c9-490d-a102-ffdb45e8b3bb
பார்வதி. - படம்: ஊடகம்

கேரள அரசு திரைப்பட வளர்ச்சிக் கழகத்தில் தாம் வகித்த பொறுப்பில் இருந்து நடிகை பார்வதி விடுவிக்கப்பட்டுள்ளார்.

நடிகைகளின் உரிமைக்காகவும் பாலியல் தொல்லைக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நடிகைகளில் பார்வதியும் ஒருவர்.

இதன் காரணமாக பட வாய்ப்புகள் குறைந்த போதிலும், அவர் மனமுடைந்துவிடவில்லை.

இந்நிலையில் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதாக வெளியான தகவல் அவர்களது ரசிகர்களை கோபத்திலும் வருத்தத்திலும் ஆழ்த்தி உள்ளது.

அதே வேளையில் பார்வதிதான் தாமாக முன்வந்து பொறுப்பில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்