‘மாமன்னன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஐம்பது நாள்களாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இதற்காக ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கு அப்படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இப்படக்குழுவினர் பங்கேற்ற வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ‘மாமன்னன்’ திரைப்படம் தமக்குள் முப்பது ஆண்டுகளாக தேங்கிக்கிடந்த ஆதங்கம் என்றார்.
“ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று யோசித்திருக்கிறேன். இசையால் அதைச் சரிசெய்ய முடியவில்லை.
“அதனால் அதை யார் செய்கிறார்களோ அவர்களோடு சேர்ந்துவிட்டேன். வடிவேலு நடித்த ஒரு குறிப்பிட்ட காட்சியைப் பார்த்த பிறகுதான் இந்தப் படத்தை மிகமிக சிறப்பாக கொண்டு போக வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது,” என்றார் ரஹ்மான்.

