சூர்யாவுக்கு ஜோடியாகும் அதிதி

சூர்யாவுக்கு ஜோடியாகும் அதிதி

1 mins read
f4df399c-f016-43d8-9646-b2fbf46977d0
அதிதி சங்கர் - படம்: ஊடகம்

‘மாவீரன்’ படத்தை அடுத்து மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் அதிதி சங்கர். அவர் அடுத்து சூர்யாவுடன் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னணி இயக்குநர் சுதா கொங்கராவின் அடுத்த படத்தில் சூர்யா நாயகனாக நடிப்பது உறுதியாகி உள்ளது. இப்படத்தை தயாரிப்பதும் சூர்யாதான்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவாகும் இப்படத்துக்கான முதற்கட்ட பணிகளைத் தொடங்கிவிட்டார் இயக்குநர் சுதா.

முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், படத்தின் நாயகியை தேர்வு செய்யும் படலம் நடைபெற்று வந்தது. அதன் முடிவில் அதிதி சங்கர் கதைக்குப் பொருத்தமான நாயகியாக இருப்பார் என படக்குழுவினர் முடிவு செய்துள்ளனராம்.

இதையடுத்து அதிதியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. சுதா கொங்கரா கூறிய கதையைக் கேட்டு அசந்து போனாராம் அதிதி. மேலும், சூர்யாவுக்கு ஜோடி என்றதும் உற்சாகமாகிவிட்டாராம்.

ஏற்கெனவே சூர்யாவின் தம்பி கார்த்தியுடன் நடித்துள்ளார் அதிதி.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்