திரையுலகில் உரிய வாய்ப்புகள் கிடைக்காத காலகட்டத்தில் தாம் பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டதாக நடிகை ரெஜினா தெரிவித்துள்ளார்.
அச்சமயம் சிலரிடம் வாய்ப்பு கேட்டதாகவும் அவர்களில் ஒருவர் படுக்கையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் எனக் கூறியதாகவும் பேட்டி ஒன்றில் ரெஜினா குறிப்பிட்டுள்ளார்.
“சில சமரசங்களுக்கு உட்பட்டால் வாய்ப்புகள் கிடைக்கும். இதற்குத் தயார் என்றால் நாம் தொடர்ந்து பேசலாம் என்று ஒரு திரையுலகப் பிரமுகர் கூறினார்.
“சம்பளம், ஒப்பந்தம் குறித்துதான் அவர் பேசுகிறார் என்று நினைத்து, எனது மேலாளர் தொடர்புகொள்வார் என்று அவரிடம் கூறினேன். அதன் பிறகு மேலாளர் மூலமாகத்தான் அந்தப் பிரமுகர் பாலியல் ரீதியில் பேசினார் என்பதே புரிந்தது,” என்று ரெஜினா கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் நடந்தபோது தமக்கு இருபது வயதுதான் ஆகியிருந்தது என்றும் தன்னைப் போன்றே வேறு சில இளம் நாயகிகளுக்கும் இவ்வாறு நேர்ந்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


