‘திருச்சிற்றம்பலம்’ படக்குழுவினர் கொண்டாட்டம்

‘திருச்சிற்றம்பலம்’ படக்குழுவினர் கொண்டாட்டம்

1 mins read
84660412-4cd3-45cb-9089-28f562e28223
நித்யா மேனனுடன் தனுஷ். - படம்: ஊடகம்

‘திருச்சிற்றம்பலம்’ படக்குழுவினர் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்தப் படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து அப்படக்குழுவினர் ஒன்றுகூடி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

தனுஷுடன், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், முனீஸ்காந்த் உள்ளிட்டோர் இணைந்து நடித்த இந்தப் படம் விமர்சன, வசூல் ரீதியில் வெற்றி பெற்றது. மித்ரன் கே. ஜவகர் இயக்கி இருந்தார்.

படம் வெளியாகி ஓராண்டாகிவிட்ட நிலையில், படக்குழுவினர் ஒன்றுகூடி மகிழ்ந்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்