மேடையில் நடிகையின் சேலையைப் பிடித்து இழுத்த நடிகர்

மேடையில் நடிகையின் சேலையைப் பிடித்து இழுத்த நடிகர்

1 mins read
703cb727-3abc-4768-8407-d59d1f241b9c
கேங்ஸ் ஆஃப் கோதாவரி படத்தின் விளம்பர விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. - படம்: இந்திய ஊடகம்

தெலுங்கில் கிருஷ்ணா சைதன்யா இயக்கி வரும் ‘கேங்ஸ் ஆப் கோதாவரி’ படத்தில் விஸ்வக் சென் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக நேஹா ஷெட்டி நடிக்கிறார். படத்தின் விளம்பர விழா, ஐதராபாத்தில் நடந்தது. இதில் விழா மேடையில் விஸ்வக் சென் மற்றும் நேஹா ஷெட்டி நடனம் ஆடினார்கள்.

அப்போது நேஹா ஷெட்டியின் சேலையைப் பிடித்து இழுத்து விஸ்வக் சென் நடனம் ஆடினார். சற்று அதிர்ச்சியானாலும், நடிகையும் அவருக்கு ஒத்துழைப்பு தந்து நடனம் ஆடினார். இருவரும் சேர்ந்து சிறப்பாக நடனம் ஆடினார்கள்.

அந்தக் காணொளிக் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. என்ன இருந்தாலும் மேடையில் நடிகையின் சேலையைப் பிடித்து இழுத்து ஆடியது முகம் சுளிக்க வைப்பதாக ரசிகர்கள் கண்டனம் தெரிவிக்கிறார்கள்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்