மொழியாலும் இனத்தாலும் சினிமாவை பிரிக்க முடியாது: ஜான்வி கபூர்

1 mins read
0739c5c3-fb94-4595-b8df-c50ad349c9c1
நடிகை ஜான்வி கபூர். - படம்: இந்திய ஊடகம்

மறைந்த நடிகை ஸ்ரீதேவி-தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியின் மகள் ஜான்வி கபூர். 2018ஆம் ஆண்டில் ‘தடாக்’ என்ற படத்தின் மூலம் இவர் சினிமாவில் அறிமுகமானார்.

அண்மையில் இவர், “தென்னிந்திய சினிமாவும் இந்தித் திரை உலகமும் ஒரே பாதையில் தான் பயணம் செய்து கொண்டிருக்கின்றன. மொழியாலும் இனத்தாலும் சினிமாவைப் பிரிக்க முடியாது,” என்று கூறியுள்ளார்.

“தற்போது மொழி மாற்றுப் படங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் மொழி, ரசிகர்களுக்கு முட்டுக்கட்டையாக இல்லை. ஓடிடி தளங்கள் இருப்பதால் நல்ல கதைகள் கிடைக்கின்றன. நான் நடிப்பதற்குச் சவாலான கதாபாத்திரங்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். என்னால் இயன்ற அளவு நன்றாக நடித்து வருகிறேன். திரைப்படங்களில் நல்ல முறையில் நடனம் ஆடவும் நகைச்சுவையாக நடிக்கவும் எனக்கு ஆசை,” என்றார் ஜான்வி.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்