நல்ல நோக்கத்துக்காக சேலைகளை விற்கும் ஆலியா

நல்ல நோக்கத்துக்காக சேலைகளை விற்கும் ஆலியா

1 mins read
71dceb69-066c-4f51-86d6-1c5dd6501ab3
ஆலியா பட். - படம்: ஊடகம்

இந்தித் திரையுலகின் முன்னணி நாயகியான ஆலியா பட்டுக்கு முப்பது வயதாகிறது.மிகக் குறுகிய காலத்திலேயே இவர் சுமார் 600 கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக வட இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஒரு திரைப்படத்தில் தாம் அணிந்து நடித்த புடவைகளையும் சில உடைகளையும் விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளாராம்.

இதுகுறித்த அறிவிப்பு சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. ஆலியாவின் சேலைகள் பல லட்சங்களுக்கு விலைபோகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“திரைப்படத்தில் நான் அணிந்த சேலைகளை விற்கிறேன். வாங்கிக் கொள்ளுங்கள். அதில் கிடைக்கும் பணம் எளிய பெண்கள், குழந்தைகளின் உடல் நலத்தைப் பேண பயன்படுத்தப்படும்,” என்று ஆலியா தெரிவித்துள்ளார்.

இந்தி நாயகிகளில் அதிர்ஷ்டம் நிறைந்த கதாநாயகி என்று ஆலியாவைக் குறிப்பிடுகின்றனர். வெற்றி, தோல்விகளை மீறி அவருக்கான நல்ல வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன.

அண்மையில் இந்திய குழுமம் ஒன்றுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார் ஆலியா. அவருக்கு சொந்தமான குழந்தைகளுக்கான ஆடை தயாரிப்பு நிறுவனத்தை அந்த முன்னணி தொழில் குழுமம் வாங்க உள்ளது. இதன் மூலம் ஆலியாவுக்கு சுமார் 350 கோடி ரூபாய் கிடைக்கும் என்கின்றனர்.

இவ்வாறு நடக்கும் பட்சத்தில் ஆலியாவின் சொத்து மதிப்பு ஆயிரம் கோடி ரூபாயை தாண்டக்கூடும்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்